திருச்சி, மார்ச் 22: திருச்சியில் இருந்து பெங்களூருக்கு ஏப்ரல் 4-ம் தேதி முதல் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
இதுகுறித்து திருச்சி ரயில்வே கோட்ட மக்கள் தொடர்பு அலுவலர் சி.கே. சிவராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
"திருச்சியில் இருந்து பெங்களூருக்கு ஏப்ரல் 4-ம் தேதி முதல் ஜூன் 6-ம் தேதி வரையிலும், பெங்களூரில் இருந்து திருச்சிக்கு ஏப்ரல் 5-ம் தேதி முதல் ஜூன் 7-ம் தேதி வரையிலும் வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் இருந்து திங்கள்கிழமைதோறும் இரவு 11.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (வண்டி எண். 06804) மறுநாள் (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு பெங்களூர் சென்றடையும்.
எதிர் வழித்தடத்தில் பெங்களூரில் இருந்து செவ்வாய்க்கிழமைதோறும் பகல் 11.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (வண்டி எண். 06803) அன்றைய தினம் இரவு 9.30 மணிக்கு திருச்சியை வந்தடையும்.
இந்த ரயில் திருச்சி கோட்டை, குளித்தல், கரூர், புகளூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, ஒசூர், பைப்பனஹள்ளி, பெங்களூர் கன்டோன்மென்ட் ஆகிய ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும்.
திருச்சியில் இருந்து புறப்படும் சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு புதன்கிழமை (மார்ச் 23) தொடங்குகிறது' என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.