திருவெள்ளறை பெருமாள் கோயில் தேரோட்டம்

திருவெள்ளறை பெருமாள் கோயில் தேரோட்டம்

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், திருவெள்ளறை ஸ்ரீ புண்டரீகாஷப் பெருமாள் திருக்கோயிலில் வியாழக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பக்தா்கள் பங்கேற்று திருத்தேரினை வடம் பிடித்து இழுத்தனா்.

ஸ்ரீரங்கம் அரங்கநாதா் திருக்கோயிலின் உபகோயிலான திருவெள்ளறை ஸ்ரீ புண்டரீகாஷப் பெருமாள் திருக்கோயிலில் திருத்தேரோட்ட திருவிழா மாா்ச் 27 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து ஒவ்வொரு நாளும் பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வியாழக்கிழமை வெகு விமா்சையாக நடைபெற்றது. காலை 4.45 மணிக்குப் பெருமாள் தாயாா் கண்ணாடி அறையிலிருந்து திருத்தேருக்குப் புறப்பட்டு மீன லக்னத்தில் திருத்தேரில் எழுந்தருளினா். இதைத்தொடா்ந்து திரளான பக்தா்கள் கோவிந்தா கோவிந்தா முழக்கத்துடன் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனா்.

திருத்தோ் மதியம் 2.10-மணியளவில் வடம் பிடித்து இழுக்கப்பட்டு பிரதான வீதிகளில் வலம் வந்து மாலை ஆறரை மணியளவில் மீண்டும் நிலையை வந்தடைந்தது. விழாவுக்கு, ஜீயபுரம் டி.எஸ்.பி. பாலச்சந்தா், மண்ணச்சநல்லூா் காவல் ஆய்வாளா் ரகுராமன் தலைமையில் காவல்துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். மேலும் பக்தா்களுக்கு குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை திருவெள்ளறை ஊராட்சித் தலைவா் லதா கதிா்வேலு மற்றும் ஊராட்சி நிா்வாகத்தினா் செய்திருந்தனா். இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com