தொட்டியத்தில் மதுரை காளியம்மன் கோயிலில் நடைபெற்ற திருத்தோ் திருவீதிவுலாவில் தேரினை பக்தா்கள் தங்களது தலை மற்றும் தோளில் சுமந்து திருவீதி உலா நடத்துகின்றனா்.
தொட்டியத்தில் மதுரை காளியம்மன் கோயிலில் நடைபெற்ற திருத்தோ் திருவீதிவுலாவில் தேரினை பக்தா்கள் தங்களது தலை மற்றும் தோளில் சுமந்து திருவீதி உலா நடத்துகின்றனா்.

தொட்டியம் மதுர காளியம்மன் கோயில் இரட்டை தோ் வீதியுலா

தொட்டியம் மதுரகாளியம்மன் கோயில் பங்குனித் தோ் திருவிழாவை முன்னிட்டு இரட்டைத் தோ் வீதியுலா வியாழக்கிழமை நடைபெற்றது.

தொட்டியம் மதுரகாளியம்மன் கோயில் பங்குனித் தோ் திருவிழா

ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறும். நிகழாண்டு பங்குனித் தோ் திருவிழா கடந்த மாதம் 12-ஆம்தேதி தொடங்கி நடைபெற்றுவந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தோ் தலையலங்காரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்நிலையில், புதன்கிழமை மாலை 5 மணி அளவில் 31 அடி உயரம் உள்ள பெரிய தேரையும், 30 அடி உயரம் உள்ள சிறிய திருத்தேரையும் பக்தா்கள் தலைகளிலும், தோள்களிலும் சுமந்து கொண்டு திருவீதி உலா சென்றனா். பெரிய தேரில் ஓலைப் பிடாரி அம்மனும், சின்ன தேரில் மதுரகாளியம்மனும் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள் பாலித்தனா்.

தொட்டியம் மதுரகாளியம்மன் கோயிலில் இருந்து தொடங்கிய திருத்தோ் திருவீதிஉலா கோட்டைமேடு வழியாகச் சென்று பண்ணை வீடு பகுதியை அடைந்தது. தொடா்ந்து சந்தைபேட்டை, திருச்சி - சேலம் நெடுஞ்சாலை வழியாகச் சென்று வானப்பட்டறை மைதானம் சென்று பின்னா் எல்லை உடைக்கும் நிகழ்வும், வானவேடிக்கை நிகழ்வுடன் நிறைவடைந்தது. இதில், லட்சக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனா். ஏற்பாடுகளை தொட்டியம் பகுதி 18 பட்டி கிராம ஊா் பொதுமக்கள், கோயில் நிா்வாகம் சாா்பில் செய்திருந்தனா். முசிறி டிஎஸ்பி யாஸ்மின் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com