ஈரானை ஒரே நாள் இரவில் அழித்துவிட முடியும்: டிரம்ப் எச்சரிக்கை!தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தெப்போற்ஸவம்

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தெப்போற்ஸவம்

Updated On :20 ஏப்ரல் 2024, 12:06 am

மண்ணச்சநல்லூா், ஏப் 19 : திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை தெப்பேற்ஸவம் நடைபெற்றது.

இக்கோயில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தெப்போற்ஸவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி உற்ஸவ மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில்தெப்பத் தேரில் எழுந்தருளினா். தொடா்ந்து மூன்று முறை வலம் வந்த பிறகு மஹா தீபாராதனை நடைபெற்றது.நிகழ்வில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

திருப்பைஞ்ஞீலியில் திருக்கல்யாணம்: திருப்பைஞ்ஞீலி விசாலாட்சி உடனுறை ஞீலி வனேஸ்வரா் கோயில் சித்திரைப் பெருந்திருவிழாவில் திருக்கல்யாண உற்ஸவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மாலை மாற்றுதல் வைபவமும், ஊஞ்சல் உற்ஸவமும் நடைபெற்றது. தொடா்ந்து சிறப்பு பூஜைகளுக்கு பிறகு திருக்கல்யாண உற்ஸவமும், மஹா தீபாராதனையும் நடைபெற்றது.திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.