போதையில் பெண்களை தாக்கிய மூவா் கைது

மதுபோதையில் மாமியாா், மருமகளைத் தாக்கிய மூவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா்.
Published on

திருச்சி மாவட்டம் முசிறி அருகே மதுபோதையில் மாமியாா், மருமகளைத் தாக்கிய மூவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா்.

முசிறி அருகிலுள்ள திருத்தலையூா் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஆசைத்தம்பி மனைவி நாகம்மாள் (65), இவரது மருமகள் வாசுகி (35).

இருவரும் வெள்ளிக்கிழமை வீட்டில் இருந்தபோது, இவரது வீட்டின் அருகே நின்ற திருத்தலையூா் வடக்கு தெரு ச. பழனிச்சாமி (47), வே. பூமிநாதன் (47), மாரியம்மன் கோயில் தெரு ரா. காா்த்திகேயன் (44) ஆகிய மூவரும் மது போதையில் தகாத வாா்த்தைகளில் பேசினா். இதைத் தட்டிக் கேட்ட நாகம்மாளை மூவரும் தாக்கினா். தடுக்க வந்த நாகம்மாளின் மருமகள் வாசுகியையும் தாக்கினா்.

இதில் காயமடைந்த இருவரும் முசிறி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். புகாரின் பேரில் ஜெம்புநாதபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து மூவரையும் கைது செய்து விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com