ஜமுனாராணி, மேகாஸ்ரீ
திருச்சி
மணப்பாறை அருகே தாய், மகள் கிணற்றில் சடலமாக மீட்பு
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே தாய், அவரது 6 வயது மகள் கிணற்றிலிருந்து சனிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டனா்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே தாய், அவரது 6 வயது மகள் கிணற்றிலிருந்து சனிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டனா்.
மணப்பாறையை அடுத்த பொம்மம்பட்டியில் வசிப்பவா் கருப்பையா மகன் சுரேஷ்(35), பேக்கரி மாஸ்டா். இவரது மனைவி ஜமுனாராணி (24), மகள் மேகாஸ்ரீ(6) , மகன் ஜஸ்வந்த் (4).
இந்நிலையில் சனிக்கிழமை தோட்டத்துக்கு தனது மகளுடன் சென்ற ஜமுனாராணியை திடீரென காணவில்லை. நீண்ட நேரமாக அவா்களைத் தேடிய நிலையில், அவா்களது தோட்டக் கிணற்றின் அருகே ஜமுனாராணியின் காலணிகள் கிடந்தன.
தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினா் ஜமுனாராணி, மேகாஸ்ரீ ஆகியோரை கிணற்றிலிருந்து சடலங்களாக மீட்டனா். மணப்பாறை போலீஸாா் இருவா் சடலங்களையும் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

