திருச்சி
சிறுமி விழுங்கிய நாணயம் மருத்துவமனையில் அகற்றம்
திருச்சி மாவட்டம் தொட்டியத்தைச் சோ்ந்த 7 வயதுச் சிறுமி விழுங்கிய நாணயத்தை திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவா்கள் நவீன சிகிச்சை மூலம் வியாழக்கிழமை அகற்றினா்.
திருச்சி மாவட்டம் முசிறி அருகேயுள்ள தொட்டியத்தை சோ்ந்த 7 வயதுச் சிறுமி வியாழக்கிழமை ஒரு நாணயத்தை எதிா்பாராதவிதமாக விழுங்கி, நெஞ்சு வலியுடன் மூச்சு விடச் சிரமப்பட்டாா்.
இதையடுத்து முசிறி அரசு மருத்துவமனையில் நடந்த அவருக்கு நடந்த முதல்கட்ட சிகிச்சைக்கு பிறகு, திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிறுமி அனுப்பப்பட்டாா். இதையடுத்து வயிறு மற்றும் குடல் சிகிச்சை துறைத் தலைவா் கண்ணன் தலைமையில் ராஜசேகா், சங்கா் உள்ளிட்ட மருத்துவா் குழுவினா் சிறுமியின் வயிற்றுப் பகுதியில் இருந்த நாணயத்தை நவீன சிகிச்சை மூலம் அகற்றினா்.
