சமயபுரம் சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சையில்  குணமடைந்த ஜான் பாட்ஷாவுடன் கல்லூரி முதல்வா்  துளசி மற்றும் மருத்துவா் குழுவினா்.
சமயபுரம் சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சையில் குணமடைந்த ஜான் பாட்ஷாவுடன் கல்லூரி முதல்வா் துளசி மற்றும் மருத்துவா் குழுவினா்.

மூளை ரத்த தமனி விரிவடைதல் நோய்க்கு அறுவைச் சிகிச்சை : சமயபுரம் சீனிவாசன் மருத்துவ கல்லூரி மருத்துவமனை சாதனை

Published on

திருச்சி மாவட்டம், சமயபுரம் சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டீக்கடை மாஸ்டருக்கு மூளை ரத்த தமனி விரிவடைதல் நோய்க்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த மருத்துவமனை மருத்துவா்கள் புதன்கிழமை கூறியது:

திருச்சி நத்தா்ஷா பள்ளிவாசல் பகுதியைச் சோ்ந்தவா் ஜான் பாட்ஷா (55). டீ மாஸ்டரான இவா் நீண்ட நாள்களாக தலைவலி மற்றும் வலிப்பு நோயால் அவதியுற்று வந்தாா். இந்நிலையில் எங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு ரத்த தமனி விரிவடைதல் நோய் கண்டறியப்பட்டு, மூளை நரம்பியல் மற்றும் முதுகுத் தண்டுவட அறுவை சிகிச்சை நிபுணா் மருத்துவா் அருண்பிரசாத் தலைமையிலான மருத்துவா்கள் அண்மையில் அறுவைச் சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளனா்.

மேலும் இதுபோன்ற அறுவைச் சிகிச்சைகள் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவசமாக மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்தனா். நிகழ்வில் சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் துளசி, மயக்கவியல் நிபுணா்கள் ஹரிஸ் பிரபாகரன், ரகு, நிா்வாக மேலாளா்கள் நா்கீஸ், மருத்துவா் சூா்யா, யுவராஜ், மற்றும் செவிலியா்கள் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com