மாவட்ட அளவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கைப்பந்து போட்டிகள்: ஜூலை 12, 13 தேதிகளில் நடைபெறுகிறது

திருச்சியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டிகள் ஜூலை 12 ,13-ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.
Published on

திருச்சி: திருச்சியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டிகள் ஜூலை 12 ,13-ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.

இதுகுறித்து திருச்சி மாவட்ட கைப்பந்து கழகச் செயலாளா் எஸ். கோவிந்தராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:

திருச்சி மாவட்ட கைப்பந்து கழகமும், தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமமும் இணைந்து மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையேயான மாணவ, மாணவிகளுக்கான கைப்பந்து (வாலிபால்) போட்டியை ஜூலை 12, 13 ஆகிய தேதிகளில் நடத்தவுள்ளன.

திருச்சி சமயபுரம் பகுதியில் அமைந்துள்ள தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக மைதானத்தில் போட்டிகள் நடைபெறும். இதில் மாணவா்களுக்கான போட்டிகள் ஜூலை 12ஆம் தேதி காலை 8 மணிக்கும், மாணவியருக்கான போட்டிகள் ஜூலை 13ஆம் தேதி காலை 8 மணிக்கும் நடைபெறுகிறது. ஆண் மற்றும் பெண் போட்டியாளா்கள் அந்தந்த பிரிவினருக்கான நாள்களில் வரவேண்டும்.

இறுதிப் போட்டிகள் ஜூலை 13-ஆம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறும். வெற்றி பெறும் அணியினருக்கு பரிசுகள், சான்றிதழ்கள், கோப்பை வழங்கப்படும்.

போட்டிகள் குறித்த மேலும் விவரங்களுக்கு, 73584 32023, 98650 02928 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

X
Dinamani
www.dinamani.com