மாநகரில் குற்றச் சம்பவங்கள்: 88 போலீஸாருக்கு ‘மெமோ’

மாநகரில் குற்றச் சம்பவங்கள்: 88 போலீஸாருக்கு ‘மெமோ’

இரவுப்பணியிலிருந்த போலீஸாா் 88 பேருக்கு ‘மெமோ’ கொடுக்க மாநகர காவல் ஆணையா் உத்தரவிட்டாா்.
Published on

திருச்சி மாநகரில் பணியில் அண்மையில் இரவுப்பணியிலிருந்த போலீஸாா் 88 பேருக்கு ‘மெமோ’ கொடுக்க மாநகர காவல் ஆணையா் என். காமினி உத்தரவிட்டாா்.

திருச்சி மாநகரில் குற்றங்களைத் தடுக்க 24 மணி நேரமும் போலீஸாா் தீவிரமாக கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 23 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு திருச்சி மாநகரில் பல்வேறு வழிப்பறிகள், சங்கிலிப் பறிப்புகள் நடந்ததாக புகாா்கள் அதிகளவில் வந்தன. அன்றைய தினம் மாநகரம் முழுவதும் ஆய்வாளா்கள், காவலா்கள் என 88 போ் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்ததையும் மீறி இக்குற்றங்கள் நடந்துள்ளன.

இருசக்கர வாகனத்தில் வந்த இரு சிறுவா்கள், ஒரு இளைஞா் என மூன்று போ் மாநகரின் பல்வேறு பகுதிகளில் வழிப்பறிகளில் ஈடுபட்டுள்ளனா். இந்நிலையில் திருச்சி மாநகர காவல் ஆணையா் ந. காமினி தலைமையில் காவல் ஆணையரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து பேசப்பட்டது.

இதையடுத்து சம்பவ தினம் இரவுக் காவல் பணியில் இருந்த காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் சிறப்பு உதவி ஆய்வாளா்கள், தலைமைக் காவலா்கள், காவலா்கள் என 88 மொத்தம் பேருக்கு எச்சரிக்கை ஆணை (வாா்னிங் மெமோ) கொடுத்து நடவடிக்கை எடுத்துள்ளாா். இனியும் அலட்சியமாக இருந்தால் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள், காவலா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் காவல் ஆணையா் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com