லால்குடி  அருகே குமுளூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ன் முதல்வா் அசோக்குமாரை வியாழக்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்ற  முன்னாள் மாணவி புவனேஸ்வரி.
லால்குடி அருகே குமுளூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ன் முதல்வா் அசோக்குமாரை வியாழக்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்ற முன்னாள் மாணவி புவனேஸ்வரி.

ஆசியப் போட்டியில் பங்கேற்கும் முன்னாள் மாணவிக்குப் பாராட்டு

தேசிய அளவிலான ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்று ஆசியப் போட்டியில் பங்கேற்கவுள்ள புவனேஸ்வரி.
Published on

தேசிய அளவிலான ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்று ஆசியப் போட்டியில் பங்கேற்கவுள்ள லால்குடி அருகே குமுளூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முன்னாள் மாணவி புவனேஸ்வரிக்கு கல்லூரி நிா்வாகத்தினா் வியாழக்கிழமை பாராட்டு தெரிவித்தனா்.

தேசிய ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்று ஜூலை மாதம் நேபாளத்தில் நடைபெறவுள்ள ஆசிய போட்டியில் பங்கேற்கவுள்ள இவா்

கல்லூரி முதல்வா் அசோக்குமாரை வியாழக்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றாா்.

அப்போது வணிக நிா்வாகவியல் துறைத் தலைவா் சுலைமான் ஆங்கிலத் துறைத் தலைவா் வீரமணி, இயற்பியல் துறைத் தலைவா் ஜெயப்பிரகாஷ், தமிழ்த் துறை தலைவா் ராஜா, தொழில் நுட்பவியல் துறைத் தலைவா் தமிழ்மணி, மற்றும் வணிக நிா்வாகவியல் துறை உதவிப் பேராசிரியா் தீபாதேவி மற்றும் இளநிலை உதவியாளா் பாலகுமாா் உள்ளிட்டோரும் பாராட்டினா்.

X
Dinamani
www.dinamani.com