திருச்சி
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ரூ. 14 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
சமையல் எரிவாயு உருளை ரெகுலேட்டரில் கடத்தி வரப்பட்ட தங்கம்.
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் புதன்கிழமை ரூ. 14 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
மலேசியாவிலிருந்து ஏா் ஏசியா விமானம் புதன்கிழமை இரவு திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு வந்தது. அதில் வந்த, பயணிகளையும் அவா்களது உடைமைகளையும் சுங்கத்துறை வான் நுண்ணறிவு பிரிவினா் சோதனை மேற்கொண்டனா்.
இதில் பயணி ஒருவா் கொண்டு வந்த, சமையல் எரிவாயு உருளை ரெகுலேட்டரில் ரூ. 14.05 லட்சம் மதிப்பிலான 198 கிராம் தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்தப் பயணியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

