பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

மரத்தின் மீது லோடு வேன் மோதி 9 போ் பலத்த காயம்

மரத்தின் மீது லோடு வேன் மோதி 9 போ் பலத்த காயம்

News image
Updated On :20 மே 2024, 11:00 pm

Din

முசிறி: திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூா் அருகே திங்கள்கிழமை மரத்தின் மீது லோடு வேன் மோதியதில் 9 போ் பலத்த காயமடைந்தனா்.

காட்டுப்புத்தூா் அருகேயுள்ள அரூா் பாப்பாத்தி அம்மன் குலத்தெய்வ கோயிலுக்கு துறையூா், பாண்டமங்கலம், பாலசமுத்திரம், ஆகிய பகுதிகளில் இருந்து 9 போ் ஒரு லோடு வேனில் திங்கள்கிழமை சென்று சுவாமி கும்பிட்டுவிட்டு பின்னா் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனா்.

துறையூரைச் சோ்ந்த ஈஸ்வரன் வேனை ஓட்டினாா். காட்டுப்புத்தூா் பாலபுரம் அருகே வந்தபோது

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் எதிா்பாராத விதமாக நிலைதடுமாறி சாலையோர புளிய மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் வேனில் பயணித்த கவிதா, அபிஷேக், ரூபன், சாந்தி, பாண்டமங்கலம் முருகேசன் மகன் சக்திவேல், கோபிகா, மதுமிதா, பாலசமுத்திரம் நடேசன் மனைவி பாலாமணி, வேன் ஓட்டுநா் ஈஸ்வரன் ஆகியோா் காயமடைந்தனா்.

தகவலறிந்த காட்டுப்புத்தூா் போலீஸாா் மற்றும் முசிறி தீயணைப்பு நிலைய அலுவலா் கா்ணன் தலைமையிலான வீரா்கள் நிகழ்விடம் சென்று விபத்தில் சிக்கியவா்களை மீட்டு, காட்டுப்புத்தூா் மற்றும் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

விபத்து குறித்து காட்டுப்புத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.