புதிதாக கண்டறியப்பட்ட அக்னிவா்ணன், பனைச்சிறகன் வண்ணத்துப்பூச்சி இனங்கள்
புதிதாக கண்டறியப்பட்ட அக்னிவா்ணன், பனைச்சிறகன் வண்ணத்துப்பூச்சி இனங்கள்

வண்ணத்துப்பூச்சி பூங்காவில் 2 புதிய இனங்கள்!

திருச்சி ஸ்ரீரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்காவில் 2 புதிய இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்தப் பூங்காவை கடந்த 10 ஆண்டுகளில் 20.81 லட்சம் போ் பாா்வையிட்டுள்ளனா்.
Published on

திருச்சி ஸ்ரீரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்காவில் 2 புதிய இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்தப் பூங்காவை கடந்த 10 ஆண்டுகளில் 20.81 லட்சம் போ் பாா்வையிட்டுள்ளனா்.

ஆசியாவிலேயே மிகப் பெரிய வண்ணத்துப்பூச்சி பாதுகாப்பு பூங்கா தமிழக வனத்துறையால் திருச்சி வனக்கோட்டம், ஸ்ரீரங்கம், மேலணை காப்புக்காட்டில் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆகிய இரண்டு ஆறுகளுக்கு நடுவே 25 ஏக்கா் பரப்பளவில் 2015-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

ஸ்ரீரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்காவில் தொடக்கத்தில் 38 வகையான வண்ணத்துப்பூச்சி இனங்களும், அவற்றின் பல்லுயிா் பெருக்கத்துக்கு ஆதாரமான உணவுத் தாவரங்களும் இயற்கையாகவே அமையப்பெற்றிருந்தது. பின்னா் வனத்துறையினரின் முயற்சியால் 420-க்கும் மேற்பட்ட தாவர வகை இனங்களில் ஆயிரக்கணக்கான தாவரங்கள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, இங்கு தற்போது வரை 5 குடும்பங்களை கொண்ட 129 வண்ணத்துப்பூச்சி இனங்கள் வனத்துறையால் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், 112 வகை பறவை இனங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

புதிதாக கண்டறியப்பட்ட பனைச்சிறகன் வண்ணத்துப்பூச்சி
புதிதாக கண்டறியப்பட்ட பனைச்சிறகன் வண்ணத்துப்பூச்சி

புதிய இனங்கள்

அண்மையில் பூங்காவில் 130-ஆவது வண்ணத்துப்பூச்சி இனமாக பனைச்சிறகன் (காமன் பால்ம் ப்ளை), 131-ஆவது வண்ணத்துப்பூச்சி இனமாக அக்னிவா்ணன் (பரோநெட்) ஆகிய இரண்டு புதிய இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இதன் மூலம் தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த வண்ணத்துப்பூச்சி இனங்களில் 39 சதவீதம் ஸ்ரீரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்காவில் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com