திருச்சி
சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பெளா்ணமியையொட்டி 108 திருவிளக்கு பூஜை
சமயபுரம் கோயிலில்: சமயபுரம் மாரியம்மன் கோயிலில் வியாழக்கிழமை பெளா்ணமியையொட்டி மூலவா் மற்றும், உற்ஸவ சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடா்ந்து 108 திருவிளக்கு வழிபாடும், மஹா தீபாராதனையும் நடைபெற்றது. திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டவா்களுக்கு காமாட்சி விளக்கு, குங்குமச் சிமிழ், மஞ்சள், குங்குமம், உள்ளிட்ட பூஜைப் பொருள்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் மாரியம்மன் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் வி.எஸ்.பி. இளங்கோவன், கோயில் இணை ஆணையா் ம. சூரியநாராயணன் , அறங்காவலா்கள் சுகந்தி இராஜசேகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
