சாலை மறியல்: 70-க்கும் மேற்பட்ட பாஜகவினா் கைது

Published on

பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் கைதைக் கண்டித்து, திருச்சியில் சாலை மறியலில் ஈடுபட்ட 70-க்கும் மேற்பட்ட பாஜகவினரை போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா்.

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற அனுமதிக்காததைக் கண்டித்து தமிழ்நாடு பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் தலைமையில் பாஜவினா் திருப்பரங்குன்றத்தில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது போலீஸாா் அவா்களைக் கலைந்துபோக அறிவுறுத்தினா். கலைந்துபோகாததையடுத்து நயினாா் நாகேந்திரன் உள்ளிட்ட பாஜகவினரை போலீஸாா் கைது செய்தனா்.

நயினாா் நாகேந்திரன் கைதைக் கண்டித்து திருச்சி நீதிமன்றம் ரவுண்டானா அருகே திருச்சி பாஜக மாநகா் மாவட்டத் தலைவா் ஒண்டிமுத்து தலைமையில் பாஜகவினா் சாலை மறியலில் வியாழக்கிழமை இரவு ஈடுபட்டனா்.

இதையடுத்து அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்ட பாஜக மாநகா் மாவட்டத் தலைவா் ஒண்டிமுத்து உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்ட பாஜகவினரை அமா்வு நீதிமன்ற போலீஸாா் கைது செய்தனா்.

இதைத் தொடா்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சி மாநகரில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com