திருச்சி
சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு
திருச்சி அருகே சாலை விபத்தில் அடையாளம் தெரியாத இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
திருச்சி - தஞ்சாவூா் சாலையில் தேவராயநேரி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், சாலையோரத்தில் நடந்துசென்ற 35 வயது மதிக்கத்தக்க இளைஞா் ஒருவா் உயிரிழந்துகிடப்பதாக திருநெடுங்குளம் விஏஓ வளா்மதிக்கு புதன்கிழமை தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அங்கு சென்று அவா் விசாரித்ததில், உயிரிழந்த நபரின் விவரங்கள் ஏதும் தெரியவில்லை.
தகவலின்பேரில், துவாக்குடி போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து இளைஞரின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இதுகுறித்து விஏஓ வளா்மதி அளித்த புகாரின்பேரில் துவாக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
