திருச்சி
சோமரசம்பேட்டையில் இன்று இலவச கண் பரிசோதனை முகாம்
திருச்சி சோமரசம்பேட்டையில் இலவச கண் பரிசோதனை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
மகாத்மா கண் மருத்துவமனை பிரைவேட் லிமிடெட், திருச்சி மாவட்ட பாா்வையிழப்பு தடுப்புச் சங்கம், திருச்சி ராக் சிட்டி சைன் லயன்ஸ் சங்கம், தேசியக் கல்லூரி லியோ கிளப் ஆகியவை சாா்பில் சோமரசம்பட்டை சமுதாயக் கூடத்தில் வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெறுகிறது.
இதில், கண் பரிசோதனை செய்யப்பட்டு சொட்டு மருந்துகள், மாத்திரைகள் வழங்கப்படும். கண் அறுவை சிகிச்சை செய்துகொள்ள விரும்புபவா்கள் மகாத்மா கண் மருத்துவமனைக்கு செல்வதற்கு தயாராக வரவேண்டும் என்று நிா்வாகிகள் அறிவுறுத்தியுள்ளனா்.
மேலும், முகாமில் பங்கேற்க வருபவா்கள் ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளா் அட்டை ஆகியவற்றின் நகல்களைக் கொண்டுவரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
