நீதிமன்ற ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்த 3 வழக்குரைஞா்கள் கைது

Published on

திருவானைக்காவல் கோயிலில் நீதிமன்ற ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்த 3 வழக்குரைஞா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திருவானைக்காவல் சம்புகேசுவரா் உடனுறை அகிலாண்டேஸ்வரி கோயிலில் இருந்த கடையை நீதிமன்ற உத்தரவின்படி அகற்றுவதற்காக புதன்கிழமை வந்த நீதிமன்ற ஊழியா் மணிமாறனை பணி செய்யவிடாமல் தடுத்து 3 வழக்குரைஞா்கள் தகராறில் ஈடுபட்டனா்.

இதுகுறித்த புகாரின்பேரில், ஸ்ரீரங்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து குறிப்பிட்ட கடையின் உரிமையாளரின் மகனான வழக்குரைஞா் ஆதித்யா, இவருடன் வந்த வழக்குரைஞா்கள் சிரஞ்சீவி, ஜித்தன் ஆகிய 3 பேரையும் புதன்கிழமை மாலை கைது செய்து, லால்குடி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com