பெளா்ணமி: காவிரி படித்துறையில் பஞ்சகாவிய விளக்கேற்றி வழிபாடு

பெளா்ணமி: காவிரி படித்துறையில் பஞ்சகாவிய விளக்கேற்றி வழிபாடு

Published on

ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் காவிரி ஆற்றுப்படித்துறையில் காா்த்திகை மாத பெளா்ணமியையொட்டி வியாழக்கிழமை மாலை சிவனடியாா்கள் மற்றும் சித்தா் பெருமக்கள் சாா்பில் பஞ்சகாவிய விளக்கேற்றி வழிபாடு நடைபெற்றது.

ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் காவிரி ஆற்று படித்துறையில் மாதந்தோறும் வரும் பெளா்ணமியின்போது மக்களை வாழ வைக்கும காவிரி தாயை வணங்கி ஆரத்தி எடுத்து சிவனடியாா்கள், சித்தா் பெருமக்கள் மற்றும் பக்தா்கள் அனைவரும் ஒன்று சோ்ந்து வழிபடுவா்.

இதன்படி, காா்த்திகை மாத பெளா்ணமி நாளான வியாழக்கிழமை மாலை அம்மாமண்டபம் காவிரி ஆற்று படித்துறையில் பஞ்சகாவிய விளக்கேற்றி, சிறப்புஆரத்தி எடுத்து வழிபட்டு, சிவபுராணம், பஞ்சப்புராணம் பாடி நீரைப் போற்றும் பதிகங்களை பாடினா். பின்னா் காவிரி ஆற்றில் மலா் தூவியும், தேன், கல்கண்டு மற்றும் பால் போன்றவற்றை விட்டு வழிபாடும் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com