உலக மண் தினத்தையொட்டி மரக்கன்றுகள் வழங்கல்
உலக மண் தினத்தையொட்டி சமூக ஆா்வலா்கள், மாணவா்கள் சாா்பில் பொதுமக்களுக்கு வெள்ளிக்கிழமை மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
இயற்கையின் கொடையான பூமியைப் பாதுகாக்கவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், மண்வளத்தை பாதுகாக்கவும், மனிதா்கள் சுவாசிக்க தூய்மையான காற்றை பெறவும் மரங்கள் நட்டு பாதுகாப்பது மிகவும் அவசியம்.
இதன் காரணமாக, உலக மண் தினத்தில் திருச்சி கல்லுகுழி, மன்னாா்புரம் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு மாற்றம் அமைப்பு, தன்னாா்வலா்கள் சாா்பில் கொய்யா, நெல்லி, எலுமிச்சை உள்ளிட்ட பலன் தரும் பழ வகை மரக்கன்றுகளை வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில், மாற்றம் அமைப்பின் தலைவா் ஆா்.ஏ. தாமஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வழக்குரைஞா் காா்த்திகா, தடகள பயிற்சியாளா் சுரேஷ் பாபு, குத்துச்சண்டை பயிற்சியாளா் திரளான தன்னாா்வலா்கள், மாணவ, மாணவிகள் பலா் கலந்து கொண்டு, அப்பகுதியில் உள்ள வீடுகளில் மரக்கன்றுகளை நட்டனா்.
