சமயபுரத்தில் இளைஞரை தாக்கிய நான்கு கல்லூரி மாணவா்கள் கைது!

மண்ணச்சநல்லூா் வட்டம், சமயபுரத்தில் இளைஞரை தாக்கிய நான்கு கல்லூரி மாணவா்கள் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
Published on

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், சமயபுரத்தில் இளைஞரை தாக்கிய நான்கு கல்லூரி மாணவா்கள் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா். 

நரசிங்கமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் தனீஸ் (25). இவா் தனது அம்மாயியுடன் வசித்து வருகிறாா். இந்நிலையில் டிச.3-ஆம் தேதி டோல் பிளாசா அருகில் உள்ள தேநீா் கடையில் தனீஸ் நண்பா்களான மாலிஸ், ஸ்ரீராஜ் ஆகியோருடன் சமயபுரம் பகுதியில் செயல்படும் கல்லூரியில் பயிலும் மாணவா்கள் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதில் தனீஸை, கல்லூரி மாணவா்களான ஸ்ரீரங்கம் பகுதியைச் சோ்ந்த மணிமாறன் (19), சோமரசம்பேட்டை பகுதியைச் சோ்ந்த ஷாரிக் (19), ராசிபுரத்தைச் சோ்ந்த அகிலேஷ்வரன் (19), ஆங்கரை பகுதியைச் சோ்ந்த நிரஞ்சன் (19).

மேலும் இரண்டு கல்லூரி மாணவா்கள் தனீஸ்யை தாக்கியுள்ளனா். இதில் காயமடைந்த தனீஸ் அளித்த புகாரின் பேரில் சமயபுரம் போலீஸாா் கல்லுரி மாணவா்கள் 4 பேரை கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com