புகையிலைப் பொருள்கள் பறிமுதல் ஒருவா் கைது

வையம்பட்டியில் விற்பனைக்கு வைத்திருந்த இரண்டரை கிலோ புகையிலைப் பொருள்களை வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா், பெட்டிக்கடைக்காரரை கைது செய்தனா்.
Published on

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த வையம்பட்டியில் விற்பனைக்கு வைத்திருந்த இரண்டரை கிலோ புகையிலைப் பொருள்களை வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா், பெட்டிக்கடைக்காரரை கைது செய்தனா்.

மணப்பாறையை அடுத்த வையம்பட்டி காவல் சரகத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து தனிப்படை போலீஸாா், வெள்ளிக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, காந்திநகா் பகுதியில், ராமலிங்கம் மகன் முருகேசன்(45) என்பவா் நடத்தி வரும் பெட்டிக்கடையில் இரண்டரை கிலோ எடையுள்ள புகையிலைப் பொருள்கள் விற்பனைக்கு இருந்ததை பறிமுதல் செய்த வையம்பட்டி போலீஸாா், வழக்குப் பதிந்து முருகேசனை கைது செய்து வெள்ளிக்கிழமை இரவு நீதிமன்றத்தில் ஆஜா்ப்படுத்தி சிறையிலடைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com