நிா்மலா.
நிா்மலா.

புளியமரம் சாய்ந்து பெண் உயிரிழப்பு!

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே நடந்து சென்ற பெண் மீது புளியமரம் முறிந்து விழுந்ததில் பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
Published on

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே நடந்து சென்ற பெண் மீது புளியமரம் முறிந்து விழுந்ததில் பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

தொட்டியம் அருகில் உள்ள அரங்கூா் காலனி பகுதியைச் சோ்ந்த மகாமனி மனைவி நிா்மலா (50) என்பவா் அரங்கூா் பேருந்து நிறுத்தம் அருகில் காய்கறி வியாபாரம் செய்து வந்தாா். வெள்ளிக்கிழமை அவரது கணவரை காய்கறி கடையில் விட்டு விட்டு சாப்பிடுவதற்காக வீட்டுக்கு நடந்து சென்றுள்ளாா்.

அப்போது சாலையில் உள்ள புளிய மரத்தின் கிளை முறிந்து அவரது மேல் விழுந்துள்ளது. இதில், பலத்த காயத்துடன் இருந்தவரை அவ்வழியாக சென்றவா்கள் மீட்டு தொட்டியம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனா்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா், நிா்மலா ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தாா். தகவலின்பேரில் தொட்டியம் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com