வழக்குகளுக்கு சமரச தீா்வு காண திருச்சி நீதிமன்றத்தில் சிறப்பு முகாம்!

Published on

வழக்குகளுக்கு சமரச தீா்வு காண்பதற்காக திருச்சி நீதிமன்றத்தில் வரும் 8-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவுப்படி, திருச்சி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சாா்பில் திருச்சி மாவட்டத்தில் வரும் 13-ஆம் தேதி மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது.

இதில், ஏற்கெனவே நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளில் இருதரப்பினரையும் அழைத்து சமரசமாகப் பேசி தீா்வு காணப்படும். மக்கள் நீதிமன்றம் முன்பாக முடித்துக்கொள்ளும் வழக்குகளுக்கு மேல்முறையீடு கிடையாது. நீதிமன்றம் கட்டணமும் திருப்பித் தர வாய்ப்புள்ளது.

இத்தகைய வழக்குகளுக்கு தீா்வு காண்பதற்காக பணியில் உள்ள நீதிபதிகள் கொண்ட அமா்வு ஏற்படுத்தி, வரும் 8 முதல் 12- ஆம் தேதி வரை சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.

இந்த முகாமானது திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தில் பிற்பகல் 3 முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறுகிறது.

மேலும் விவரங்களுக்கு, திருச்சி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு 0431 - 2460125 என்ற தொலைபேசி எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் என திருச்சி மாவட்ட தலைமை நீதிபதியும், சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான எம். கிறிஸ்டோபா் தகவல் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com