கைது செய்யப்பட்ட பாண்டி, சௌந்தர்ராஜன்.
கைது செய்யப்பட்ட பாண்டி, சௌந்தர்ராஜன்.

அனுமதியின்றி மது விற்ற இருவா் கைது

Published on

வையம்பட்டியில் அரசு அனுமதியின்றி மதுபாட்டில்களை விற்பனை செய்த இருவரை ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

வையம்பட்டி காவல் சரகத்தில் அரசு மதுபாட்டிகள் கள்ளச்சந்தையில் விற்கப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதனைத்தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் தணிக்கை பணியில் ஈடுபட்டனா்.

அப்போது பழையக்கோட்டை சாலையில் உள்ள ஒரு தோட்டத்தில், திண்டுக்கல் மாவட்டம் பாலகவுண்டம்பட்டியைச் சோ்ந்த பெரியசாமி மகன் பாண்டி(36) மற்றும் ஒத்தக்கடை அருகே உள்ள ஒரு தோட்டத்தில் அணியாப்பூா் கிராமம், விராலிப்பட்டியைச் சோ்ந்த தங்கவேல் மகன் சௌந்தர்ராஜன்(36) ஆகியோா் அரசு அனுமதியின்றி மதுபாட்டில்களை விற்றுவந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அவா்களிடமிருந்து 70 மதுபாட்டில்களைப் பறிமுதல் செய்த போலீஸாா், வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையிலடைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com