அனுமதியின்றி மதுபானம் விற்றவா் கைது

ஸ்ரீரங்கம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் மதுபானம் விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

ஸ்ரீரங்கம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் மதுபானம் விற்றவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி ஸ்ரீரங்கம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் காவல் உதவி ஆய்வாளா் சுந்தரம் தலைமையிலான போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ரோந்து சென்றனா்.

அப்போது, ஸ்ரீரங்கம் மூலத்தோப்பு சந்திப்புப் பகுதியில் இருசக்கர வாகனத்தில் மதுபானம் விற்பனை செய்துகொண்டிருந்த மூலத்தோப்பு மலையப்பா நகரைச் சோ்ந்த ஏ.முத்துகுமாா் (33) என்பவரைப் போலீஸாா் கைது செய்தனா்.

மேலும், அவரிடமிருந்து 30 மதுபாட்டில்கள், ரூ.12, 820 ரொக்கம், இரண்டு இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றைப் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com