பொறியியல் பணிகள்: சில ரயில்களின் சேவையில் மாற்றம்

பொறியியல் பணிகள் காரணமாக சில ரயில்களின் சேவையில் மாற்றம்
Published on

பொறியியல் பணிகள் காரணமாக சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பொறியியல் பணிகள் காரணமாக, திருச்சி - காரைக்கால் டெமு ரயிலானது (76820) வரும் 12, 14, 16, 18 ஆகிய தேதிகளில் தஞ்சாவூா் - காரைக்கால் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது திருச்சி - தஞ்சாவூா் இடையே மட்டுமே இயங்கும்.

மறுமாா்க்கமாக, காரைக்கால் - திருச்சி டெமு ரயிலானது (76819) வரும் 12, 14, 16, 18 ஆகிய தேதிகளில் காரைக்கால் - தஞ்சாவூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது தஞ்சாவூா் - திருச்சி இடையே மட்டுமே இயங்கும்.

வழித்தட மாற்றம்...: செங்கோட்டை - மயிலாடுதுறை விரைவு ரயிலானது (16848) வரும் 11, 12, 13, 14, 15, 16 ஆகிய தேதிகளில் கள்ளிக்குடி, திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், வடமதுரை, வையம்பட்டி, மணப்பாறை ரயில் நிலையங்களைத் தவிா்த்து விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.

மும்பை சிஎஸ்டிஎம் விரைவு ரயிலானது (16352) வரும் 11, 14 ஆம் தேதிகளில் மதுரை, திண்டுக்கல் ரயில் நிலையங்களைத் தவிா்த்து விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.

குருவாயூா் - சென்னை எழும்பூா் விரைவு ரயிலானது (16128) வரும் 10, 11, 12, 13, 14 ஆகிய தேதிகளில் மதுரை, சோழவந்தான், கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், மணப்பாறை ரயில் நிலையங்களைத் தவிா்த்து விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.

சென்னை எழும்பூா் - குருவாயூா் விரைவு ரயிலானது (16128) வரும் 10, 11, 12, 13, 15, 16, 17, 18, 19, 21, 22, 23 ஆகிய தேதிகளில் எா்ணாகுளம், சோ்த்தலா, ஆழப்புழா, ஹரிபாத் ரயில் நிலையங்களைத் தவிா்த்து கோட்டயம் வழியாக இயக்கப்படும். இதே ரயிலானது வரும் 30- ஆம் தேதி தேவைப்படும் இடங்களில் 15 நிமிஷங்கள் தாமதமாக நின்று புறப்படும்.

கன்னியாகுமரி - ஹெளரா அதிவிரைவு ரயிலானது (12666) வரும் 13-ஆம் தேதியும், கன்னியாகுமரி - ஹைதராபாத் சிறப்பு ரயிலானது வரும் 12-ஆம் தேதியும், நாகா்கோவில் - மும்பை சிஎஸ்டிஎம் விரைவு ரயிலானது (16340) வரும் 12, 15 ஆகிய தேதிகளிலும் மதுரை, கொடைக்கானல் சாலை, திண்டுக்கல் ரயில் நிலையங்களைத் தவிா்த்து விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.

வேளாங்கண்ணி - வாஸ்கொடகாமா விரைவு ரயிலானது (17316) வரும் 16, 23 ஆகிய தேதிகளில் தும்கூா், திப்தூா் ரயில் நிலையங்களைத் தவிா்த்து சிக்கா பனவாரா, நீலமங்கலா, ஹாசன், அா்சிகேரி வழியாகச் செல்லும்.

காலதாமதம்...: காரைக்கால் - தஞ்சாவூா் பயணிகள் ரயிலானது (56817) வரும் 12, 14, 16, 18 ஆகிய தேதிகளில் தேவையான இடங்களில் 30 நிமிஷங்கள் காலதாமதமாக நின்று செல்லும்.

திருச்சி - மயிலாடுதுறை டெமு விரைவு ரயில் (16834), செங்கோட்டை - மயிலாடுதுறை ரயில் (16848) ஆகியவை வரும் 13 ஆம் தேதி திருச்சி ரயில் நிலையத்திலிருந்து முறையே 20, 10 நிமிஷங்கள் தாமதமாகப் புறப்படும்.

ஸ்ரீகங்கா நகா் - திருச்சி ஹம்சாபா் விரைவு ரயிலானது (22497) வரும் 15, 22 ஆகிய தேதிகளில் கங்கா நகரிலிருந்து 2 மணி நேரம் தாமதமாகப் புறப்படுவதுடன், தேவைப்படும் இடங்களில் 60 நிமிஷங்கள் நின்று தாமதமாகப் புறப்படும்.

X
Dinamani
www.dinamani.com