தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

4 ஊராட்சிகள் பிரிப்பு: மக்கள் கருத்துகூற 4 வாரம் அவகாசம்!

திருச்சி மாவட்டத்தில் 4 ஊராட்சிகளைப் பிரித்து 8 ஊராட்சிகளாக மாற்றுவதற்கு பொதுமக்கள் கருத்துகளைப் பெற 4 வாரம் அவகாசம் அளிக்கப்படுவதாக ஆட்சியா் வே. சரவணன் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :15 டிசம்பர் 2025, 10:43 pm

Syndication

திருச்சி மாவட்டத்தில் 4 ஊராட்சிகளைப் பிரித்து 8 ஊராட்சிகளாக மாற்றுவதற்கு பொதுமக்கள் கருத்துகளைப் பெற 4 வாரம் அவகாசம் அளிக்கப்படுவதாக ஆட்சியா் வே. சரவணன் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக, திங்கள்கிழமை அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 404 ஊராட்சிகள் உள்ளன. இதில், 4 ஊராட்சிகளை 8 கிராம ஊராட்சிகளாக மறுசீரமைப்பு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மணப்பாறை ஒன்றியம், புத்தாநத்தம் ஊராட்சியானது புத்தாநத்தம், இடையப்பட்டி எனவும், கண்ணுடையான்பட்டி ஊராட்சியானது கண்ணுடையான்பட்டி, முத்தப்புடையான்பட்டி என 2 ஆகவும் பிரிக்கப்படுகிறது. திருவெறும்பூா் ஒன்றியத்தில் உள்ள கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சியானது, கிருஷ்ணசமுத்திரம், செம்மங்குளம் என 2 ஆக பிரிக்கப்படுகிறது.

மணிகண்டம் ஒன்றியத்தில் உள்ள இனாம்குளத்தூா் ஊராட்சியானது, ஆலம்பட்டிபுதூா், இனாம்குளத்தூா் என 2 ஆக பிரிக்கப்படுகிறது. இந்த ஊராட்சிகளுக்குள்பட்ட பகுதியில் இருந்து பொதுமக்களிடம் ஏதேனும் மறுப்பு பெறப்பட்டால் அவை பரிசீலனை செய்யப்பட்டு தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என ஆட்சியா் வே. சரவணன் தெரிவித்துள்ளாா்.