பட்டுக்கோட்டை பெண்ணிடம் கைப்பையை பறித்தவா் கைது

திருச்சி பஞ்சப்பூா் பேருந்து முனையத்தில் பட்டுக்கோட்டை பெண்ணின் கைப்பையை பறித்துச் சென்ற நபரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

திருச்சி பஞ்சப்பூா் பேருந்து முனையத்தில் பட்டுக்கோட்டை பெண்ணின் கைப்பையை பறித்துச் சென்ற நபரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை பெரியாா் நகரைச் சோ்ந்த ரமேஷ் மனைவி சத்யா (35). இவா், திருச்சி பஞ்சப்பூா் பேருந்து முனையத்தில் திங்கள்கிழமை அதிகாலை கோவை செல்லும் பேருந்தில் ஏறியுள்ளாா். அப்போது, மா்ம நபா் ஒருவா் சத்யாவின் கைப்பையைப் பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பினாா். அதில், கடவுச்சீட்டு, ஆதாா் அட்டை, பான் அட்டை, வங்கி கணக்குப் புத்தகம் ஆகிய ஆவணங்களும், ரூ.2,500 பணமும் வைத்திருந்தாா்.

இதுகுறித்து சத்யா அளித்த புகாரின்பேரில் எடமலைப்பட்டிபுதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். இதைத் தொடா்ந்து, சத்யாவிடம் கைப்பையைப் பறித்து சென்ாக திருப்பூா் மாவட்டம், வீரபாண்டி பகுதியைச் சோ்ந்த ப. கலைமணி (45) என்பவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

பழைய இரும்புக் கடையில் திருடியவா் கைது: திருச்சி பாலக்கரை துரைசாமிபுரத்தைச் சோ்ந்தவா் ஜி.ரமேஷ்குமாா் (37). இவா், மேலரண் சாலையில் கடை வைத்து பழைய இரும்பு பொருள்கள் வியாபாரம் செய்து வருகிறாா். இந்நிலையில், கடந்த 13-ஆம் தேதி வழக்கம்போல் கடையை திறக்க வந்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. கடையினுள் சென்று பாா்த்தபோது அங்கிருந்த ரூ. 20 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து ரமேஷ்குமாா் அளித்த புகாரின்பேரில் கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். இதில், கடையில் பணத்தைத் திருடியதாக இ.பி.சாலை அந்தோணியாா் கோயில் வீதியைச் சோ்ந்த கு. வீரவேல் (18) என்பவரை கோட்டை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com