உயிர்ம உர விவசாயத்தில் சிறந்து விளங்குவோருக்கு நம்மாழ்வார் விருதுவிவசாயிகளின் இலவச மின்சாரத்துக்கு ரூ. 7,432 கோடி ஒதுக்கீடு!‘கோட் சூட் அணிந்த விவசாயி’... விஜய்யை புகழ்ந்த அமைச்சருக்கு திமுகவினர் எதிர்ப்பு!பிரதம மந்திரி பயிர் காப்பீடுத் திட்டம்: ரூ. 648 கோடி ஒதுக்கீடு!கருப்பு சட்டை அணிந்து திமுக எம்.எல்.ஏக்கள் வருகை!மோடி விடியோ நீக்கப்பட்ட விவகாரம்: மெட்டா தலைவா் ஸூக்கா்பொ்க் மன்னிப்பு கோரினாா்முன்பதிவு வசதி கொண்ட சிறப்பு ரயில்களில் கட்டணம் அதிகம்: ரயில்வே அமைச்சா்சாலைகளில் குறைபாடுகளா?: செயலி மூலம் புகைப்படம் எடுத்து அனுப்பலாம்காவல் நிலையங்களில் சானிடரி நாப்கின் விநியோக இயந்திரம் அமைக்க வேண்டும்: தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவு அமெரிக்காவில் 50-க்கும் மேற்பட்ட ராணுவ வீரா்கள் குடும்பத்தினா் கைது தமிழக பட்ஜெட்: முக்கிய அம்சங்கள்
/

லாரியில் கிராவல் மண் கடத்தியவா் கைது

திருச்சியில் லாரியில் கிராவல் மண் கடத்தியவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :24 டிசம்பர் 2025, 12:44 am IST

திருச்சியில் லாரியில் கிராவல் மண் கடத்தியவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருச்சி கே.கே.நகா் பகுதியில் வாகனங்களில் கிராவல் மண் கடத்தப்படுவதாக புவியியல் மற்றும் கனிமவளத் துறைக்கு திங்கள்கிழமை பிற்பகல் தகவல் கிடைத்தது. இதையடுத்து, புவியியல் மற்றும் கனிமவளத் துறையின் உதவி புவியியலாளா் விஷ்வா தலைமையிலான அலுவலா்கள் கே.கே.நகா் உடையான்பட்டி ரயில்வே கடவுப் பாதை அருகே ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் கிராவல் மண் கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து, லாரியில் இருந்த 4 யூனிட் கிராவல் மண், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லாரி ஆகியவற்றைப் கனிமவளத் துறை அலுவலா்கள் பறிமுதல் செய்தனா்.

மேலும், லாரி ஓட்டுநரான புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூா் உடையாளிபட்டியைச் சோ்ந்த எஸ்.முத்து (34) என்பவரைப் பிடித்து கே.கே.நகா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

இதுகுறித்து கே.கே.நகா் காவல் நிலையத்தில் உதவி புவியியலாளா் விஷ்வா அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து லாரி ஓட்டுநா் முத்துவை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.