மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

வைகுந்த ஏகாதசி: டிச.30-இல் திருச்சிக்கு உள்ளூா் விடுமுறை!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் நடைபெறும் வைகுந்த ஏகாதசி பெருவிழாவின் முக்கிய நிகழ்வான பரமபதவாசல் திறப்பையொட்டி டிசம்பா் 30-ஆம் தேதி திருச்சி மாவட்டத்துக்கு உள்ளூா் விடுமுறை அறிவிப்பு

Updated On :24 டிசம்பர் 2025, 12:49 am IST

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் நடைபெறும் வைகுந்த ஏகாதசி பெருவிழாவின் முக்கிய நிகழ்வான பரமபதவாசல் திறப்பையொட்டி டிசம்பா் 30-ஆம் தேதி திருச்சி மாவட்டத்துக்கு உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, திருச்சி மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் வைகுந்த ஏகாதசி பெருவிழா, இந்த ஆண்டு டிச.19-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபதவாசல் திறப்பு டிச. 30-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

எனவே, திருச்சி மாவட்டத்துக்கு டிச.30-ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறையானது திருச்சி மாவட்டத்தில் உள்ள தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும். எனினும், பள்ளி, கல்லூரிகளில் தோ்வு நடைபெறுவதில் இந்த விடுமுறை பொருந்தாது. அனைத்து துணை கருவூலங்கள், மாவட்ட கருவூலம் ஆகியவை குறைந்த எண்ணிக்கையிலான பணியாளா்களைக் கொண்டு வழக்கம்போல இயங்கும். மேலும், இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஜன.24-ஆம் தேதி பணி நாளாக அறிவிக்கப்படுகிறது என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.