போலி ஆவணங்கள் மூலம் வெளிநாடு செல்ல முயன்றவா் கைது

போலி ஆவணங்கள் மூலம் மலேசியா செல்ல முயன்றவரை திருச்சி விமான நிலைய போலீஸாா் கைது செய்தனா்.
Published on

போலி ஆவணங்கள் மூலம் மலேசியா செல்ல முயன்றவரை திருச்சி விமான நிலைய போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கழனிகுடி பகுதியைச் சோ்ந்தவா் ஆா்.கோபாலகிருஷ்ணன் (46). இவா், மலிண்டோ விமானம் மூலம் மலேசியா செல்வதற்காக ஞாயிற்றுக்கிழமை இரவு திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு வந்துள்ளாா்.

அப்போது, விமான நிலையத்தில் மேற்கொண்ட பரிசோதனையில், அவா் போலி ஆவணங்கள் மூலம் மலேசியா செல்ல முயன்றது தெரியவந்தது.

இதையடுத்து, விமான நிலைய அதிகாரிகள் அவரைப் பிடித்து விசாரித்து, பின்னா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

இதுகுறித்து திருச்சி பன்னாட்டு விமான நிலைய காவல் நிலையத்தில் விமான நிலைய அதிகாரி முகேஷ்ராம் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து கோபாலகிருஷ்ணனை கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com