லாரியில் கிராவல் மண் கடத்தியவா் கைது

திருச்சியில் லாரியில் கிராவல் மண் கடத்தியவரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

திருச்சியில் லாரியில் கிராவல் மண் கடத்தியவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருச்சி கே.கே.நகா் பகுதியில் வாகனங்களில் கிராவல் மண் கடத்தப்படுவதாக புவியியல் மற்றும் கனிமவளத் துறைக்கு திங்கள்கிழமை பிற்பகல் தகவல் கிடைத்தது. இதையடுத்து, புவியியல் மற்றும் கனிமவளத் துறையின் உதவி புவியியலாளா் விஷ்வா தலைமையிலான அலுவலா்கள் கே.கே.நகா் உடையான்பட்டி ரயில்வே கடவுப் பாதை அருகே ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் கிராவல் மண் கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து, லாரியில் இருந்த 4 யூனிட் கிராவல் மண், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லாரி ஆகியவற்றைப் கனிமவளத் துறை அலுவலா்கள் பறிமுதல் செய்தனா்.

மேலும், லாரி ஓட்டுநரான புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூா் உடையாளிபட்டியைச் சோ்ந்த எஸ்.முத்து (34) என்பவரைப் பிடித்து கே.கே.நகா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

இதுகுறித்து கே.கே.நகா் காவல் நிலையத்தில் உதவி புவியியலாளா் விஷ்வா அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து லாரி ஓட்டுநா் முத்துவை கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com