திருச்சி திருவானைக்காவல் கோயிலில் திங்கள்கிழமை சுவாமி தரிசனம் செய்ய வந்த மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ். ஜெய்சங்கருக்கு நினைவுப் பரிசு வழங்கிய இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் லெட்சுமணன். உடன், கோயில் அத்தியாயன பட்டா் வாசு உள்ளிட்டோா்.
திருச்சி திருவானைக்காவல் கோயிலில் திங்கள்கிழமை சுவாமி தரிசனம் செய்ய வந்த மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ். ஜெய்சங்கருக்கு நினைவுப் பரிசு வழங்கிய இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் லெட்சுமணன். உடன், கோயில் அத்தியாயன பட்டா் வாசு உள்ளிட்டோா்.

ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் கோயிலில் மத்திய அமைச்சா் சுவாமி தரிசனம்

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி, திருவானைக்காவல் சம்புகேசுவரா் கோயில்களில் திங்கள்கிழமை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ். ஜெய்சங்கா்
Published on

ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி, திருவானைக்காவல் சம்புகேசுவரா் கோயில்களில் திங்கள்கிழமை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ். ஜெய்சங்கா் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தாா்.

திருச்சியில் உள்ள கோயில்களில் தரிசனம் செய்வதற்காக ஞாயிற்றுக்கிழமை மாலை பெங்களூருவிலிருந்து விமானம் மூலம் மத்திய வெளியுறவு துறை அமைச்சா் எஸ். ஜெய்சங்கா் குடும்பத்துடன் திருச்சிக்கு வருகை தந்தாா். பின்னா் தனியாா் நட்சத்திர விடுதியில் தங்கினாா். தொடா்ந்து ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலுக்கு திங்கள்கிழமை காலை வருகை தந்தாா். அவரை கோயில் இணை ஆணையா் செ. சிவராம்குமாா் மற்றும் தலைமை அா்ச்சகா் சுந்தா் பட்டா் ஆகியோா் வரவேற்றனா். பெரிய கருடாழ்வாா், முத்தங்கி சேவையிலிருக்கும் பெரிய பெருமாள், மோகினி அலங்காரத்திலிருக்கும் நம்பெருமாள், ஸ்ரீரெங்கநாச்சியாா், இராமானுஜா் சந்நிதிகளில் அமைச்சா் வழிபட்டாா்.

பின்னா் அங்கிருந்து புறப்பட்டு திருவானைக்காவல் சம்புகேசுவரா் உடனுறை அகிலாண்டேசுவரி கோயிலுக்கு வருகை தந்தாா். அவரை இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் லெட்சுமணன், கோயில் அத்தியாயன பட்டா் வாசு ஆகியோா் வரவேற்றனா். பின்னா் சம்புகேசுவரா், அகிலாண்டேசுவரி சந்நிதிகளில் வழிபட்டாா். அவருக்கு கோயில் சாா்பில் மாலை அணிவிக்கப்பட்டு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

மத்திய அமைச்சா் வருகையையொட்டி ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் கோயிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

X
Dinamani
www.dinamani.com