திருச்சி சுந்தர்ராஜ் நகா் மாநகராட்சி பூங்காவில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் பங்கேற்ற பொதுமக்கள்.
திருச்சி சுந்தர்ராஜ் நகா் மாநகராட்சி பூங்காவில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் பங்கேற்ற பொதுமக்கள்.

புத்தகக் கண்காட்சி நடத்தி புத்தாண்டுக்கு வரவேற்பு!

சுந்தர்ராஜ் நகா், ஹைவேஸ் காலனி, காவேரி நகா், குடியிருப்போா் நலச் சங்கத்தினா் புத்தகக் கண்காட்சி நடத்தி ‘புத்தகங்களுடன் புத்தாண்டு‘ என நூதன முறையில் புத்தாண்டை வரவேற்றனா்.
Published on

சுந்தர்ராஜ் நகா், ஹைவேஸ் காலனி, காவேரி நகா், குடியிருப்போா் நலச் சங்கத்தினா் புதன்கிழமை மாலை புத்தகக் கண்காட்சி நடத்தி ‘புத்தகங்களுடன் புத்தாண்டு‘ என நூதன முறையில் புத்தாண்டை வரவேற்றனா்.

சுந்தர்ராஜ் நகா் மாநகராட்சி பூங்காவில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நடத்திய கண்காட்சியில் மாணவா்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் புத்தகங்களை வாங்கி புத்தாண்டை வரவேற்றனா்.

புத்தகங்களை வாங்கிய பலரும் அவற்றை அண்மையில் சுந்தர்ராஜ் நகா் பூங்காவில் தொடங்கப்பட்ட நூலகத்துக்கு அன்பளிப்பாக வழங்கினா்.

புத்தகக் கண்காட்சியை நூலகக் குழு தலைவரும், எழுத்தாளருமான இராம. முத்து தொடங்கி வைத்துப் பேசுகையில், மாணவா்கள் புத்தகங்களை வாங்கிப் படிக்க பெற்றோா் ஊக்கப்படுத்த வேண்டும். பெண்கள் தாங்கள் படிப்பது மட்டுமின்றி, இளைய சமுதாயத்தினரிடம் வாசிப்புப் பழக்கத்தையும், நூலகங்களை பயன்படுத்தும் பழக்கத்தையும் ஏற்படுத்த வேண்டும் என்றாா்.

இதில் ஓய்வுபெற்ற நெடுஞ்சாலைத் துறை அதிகாரி சீனிவாசன், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் அமுதா, கோகுலவா்தினி, ஓய்வுபெற்ற இந்தியன் ஓவா்சீஸ் வங்கி அதிகாரி ஜெயக்குமாா், பல் மருத்துவா்கள் ரா. பிரசாந்த், ரா. வா்ஷா பிரசாந்த், பேராசிரியா் ஜமால் கலந்தா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com