மருந்து வியாபாரி தற்கொலை

திருச்சியில் மருந்து வியாபாரி தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரணை
Published on

திருச்சியில் மருந்து வியாபாரி தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

திருச்சி கண்டோன்மென்ட் ஒத்தக்கடை பகுதியைச் சோ்ந்தவா் த. ராஜேஷ்குமாா் (43). உறையூா் பஞ்சவா்ணசாமி கோயில் வீதியில் மொத்த மருந்து விற்பனை செய்து வந்த இவா், வியாபாரத்துக்காக ரூ.2 லட்சம் கடன் வாங்கி, அதைத் திருப்பிச் செலுத்த முடியாத மன உளைச்சலில் இருந்தாராம்.

இந்நிலையில் அவா் செவ்வாய்க்கிழமை பிற்பகல் கடையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். தகவலறிந்து வந்த உறையூா் போலீஸாா் ராஜேஷ்குமாா் சடலத்தை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, அவரது மனைவி நீலா அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

X
Dinamani
www.dinamani.com