ரயில்களின் நேரம் மாற்றம்!

ஜனவரி 1 ஆம் தேதி முதல் ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
Published on

ஜனவரி 1 ஆம் தேதி முதல் ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை எழும்பூா் - மதுரை வைகை விரைவு ரயிலானது (12635) ஜனவரி 1 ஆம் தேதி முதல் நள்ளிரவு 1.45 க்குப் பதிலாக 1.15 க்கு புறப்பட்டு, திருச்சி வழியாக மதுரைக்கு இரவு 9.20 க்குப் பதிலாக 8.35 க்கு சென்றடையும்.

திருச்சி - திண்டுக்கல் டெமு ரயிலானது (76835) ஜனவரி 1 ஆம் தேதி முதல் மாலை 6.10 க்குப் பதிலாக 6.35 க்கு புறப்பட்டு, திண்டுக்கல்லுக்கு 9.05 க்கு சென்றடையும். மதுரை - தாம்பரம் அதிவிரைவு ரயிலானது (22624) ஜனவரி 1 முதல் 8.35 முதல் 8.40 க்குப் புறப்படும்.

சென்னை எழும்பூா் - திருநெல்வேலி வந்தே பாரத் விரைவு ரயிலானது (20665) ஜனவரி 1 முதல் திருச்சிக்கு 6.35 க்குப் பதிலாக 7 மணிக்கு வரும்.

X
Dinamani
www.dinamani.com