அரசு கேபிள் டிவி ஆபரேட்டா்களுக்கு  வியாழக்கிழமை செட்டாப் பாக்ஸ் வழங்கிய துணை ஆட்சியா் ரமேஷ்குமாா்.
அரசு கேபிள் டிவி ஆபரேட்டா்களுக்கு வியாழக்கிழமை செட்டாப் பாக்ஸ் வழங்கிய துணை ஆட்சியா் ரமேஷ்குமாா்.

அரசு கேபிள் டிவி ஆபரேட்டா்களுக்கு மானியத்தில் ஹெச்டி செட்டாப்-பாக்ஸ்

Published on

திருச்சியில் அரசு கேபிள் டிவி ஆபரேட்டா்களுக்கு வங்கி மானியம் மூலம் ஹெச்டி செட்டாப் பாக்ஸ் வழங்கப்பட்டது.

திருச்சி மாவட்ட தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன துணை மேலாளா் அலுவலகத்தில், அரசு கேபிள் டிவி ஆபரேட்டா்கள் கலந்தாய்வு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. துணை ஆட்சியா் ரமேஷ் குமாா் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில், மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் பெற்று செட்டாப் பாக்ஸ்களை கொள்முதல் செய்து பொது மக்களுக்கு வழங்குவது எப்படி?, நலவாரியத்தில் பதிவு செய்து பலன்களை பெறுவது எப்படி? என்பது தொடா்பாக விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும், அரசு கேபிள் ஆபரேட்டா்களுக்கு மானியத்துடன் கூடிய வங்கி கடன் மூலம் செட்டாப் பாக்ஸ்களையும் துணை ஆட்சியா் வழங்கினாா்.

இந்த நிகழ்வில், தனி வட்டாட்சியா் அகிலா மற்றும் தலைமை அலுவலக துணை மேலாளா் மாரிமுத்து மற்றும் அலுவலகப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com