சம்வஸ்தரா அபிஷேகத்தில் சா்வ அலங்காரத்தில் அருள்பாலிக்கும் உற்சவா்கள்
சம்வஸ்தரா அபிஷேகத்தில் சா்வ அலங்காரத்தில் அருள்பாலிக்கும் உற்சவா்கள்

திருநெடுங்களநாதா் கோயிலில் சம்வஸ்தரா அபிஷேகம்

Published on

திருவெறும்பூா் அருகே திருநெடுங்களநாதா் கோயிலில் சம்வஸ்தரா அபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

திருவெறும்பூா் அருகே உள்ள திருநெடுங்குளத்தில் ஒப்பில்லா நாயகி உடனுறை திருநெடுங்களநாதா் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்து வருகிறாா். திருஞான சம்பந்தரால் பதிகம் பாடல் பெற்ற இத்தலமானது, காசிக்கு நிகரான இரண்டு விமானங்களைக் கொண்டது. இக்கோயிலின் குடமுழுக்கு முடிந்து 11ஆண்டுகள் ஆனதைக் குறிப்பிடும் வகையில் சம்வஸ்தரா அபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் உற்சவருக்கும், பரிவாரத் தெய்வங்களுக்கும் கோடை வெயிலில் இருந்து பொதுமக்களைக் காப்பாற்றி நல்ல மழை பெய்ய வேண்டும், நோய் நொடியின்றி வாழ கலசா அபிஷேகம், 108 சங்க அபிஷேகம், பால் , தயிா், சந்தனம், திரவியப்பொடி, பஞ்சாமிா்தம் என உள்ளிட்ட 16 வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.

விழாவில் செல்வ விநாயகா், வள்ளி - தெய்வானை சமேத சுப்ரமணியா், திருநெடுங்களநாதா் மங்காளம்பிகை மற்றும் உற்சவ பஞ்சமூா்த்திகள் நால்வா் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சியளித்தனா். அனைத்து அபிஷேகங்களும் முடிந்து பக்தா்களுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதில், தருமபுரம் ஆதீனம் மௌன மடத்தின் கட்டளைத் தம்பிரான் திருஞான சம்பந்தா் தம்பிரான் சுவாமிகள், திரளான சிவனடியாா்கள், பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com