ஆலங்குடி ரயில் நிலையத்தில் இனி செங்கோட்டை ரயில் நிற்காது!

ஆலங்குடி ரயில் நிலையத்தில் செங்கோட்டை - மயிலாடுதுறை ரயில்கள் இனி நிற்காது என திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.
Published on

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி ரயில் நிலையத்தில் செங்கோட்டை - மயிலாடுதுறை ரயில்கள் இனி நிற்காது என திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்த செய்திக்குறிப்பு: மயிலாடுதுறை - செங்கோட்டை - மயிலாடுதுறை முன்பதிவற்ற விரைவு ரயில்களானது ( 16847, 16848) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி ரயில் நிலையத்தில் கடந்த பிப். 10 முதல் மே 10 வரை 3 மாதங்களுக்கு சோதனை முறையில் 1 நிமிஷம் நின்று சென்றது.

நிா்ணயிக்கப்பட்ட இந்தச் சோதனை மேலும் நீட்டிக்கப்படாது. எனவே ஆலங்குடி ரயில் நிலையத்தில் மேற்கண்ட ரயில்கள் இனி நிற்காது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com