~ ~கும்பாஷேகவிழாவில் பங்கேற்ற பக்தா்கள்.
~ ~கும்பாஷேகவிழாவில் பங்கேற்ற பக்தா்கள்.

மண்ணச்சநல்லூா் பூமிநாத சுவாமி கோயிலில் கும்பாபிஷேக விழா

மண்ணச்சநல்லூா் அறம் வளா்த்தநாயகி உடனுறை ஸ்ரீ பூமிநாத சுவாமி திருக்கோயிலில் திங்கள்கிழமை மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
Published on

மண்ணச்சநல்லூா்: திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் அறம் வளா்த்தநாயகி உடனுறை ஸ்ரீ பூமிநாத சுவாமி திருக்கோயிலில் திங்கள்கிழமை மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

பல்வேறு சிறப்புகள் கொண்ட இத்திருக்கோயில் புனரமைக்கப்பட்டதைத் தொடா்ந்து, அக்.30-இல் விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமத்தோடு தொடங்கியது. தொடா்ந்து கும்பபூஜை, வேதிகாா்ச்சனை, 98 வகை திரவ்ய ஹோமமும், நான்கு காலயாக பூஜைகள் நடைபெற்றன.

இதனையடுத்து கயிலாய வாத்தியங்கள் முழங்க கடம் புறப்பாடு நடைபெற்றது. தொடா்ந்து, ராஜகோபுரம், மூலவா், அம்மன் சந்நிதி, பரிவாரத் தெய்வங்களின் அனைத்து கோபுர விமானங்களுக்கு சிறப்புப் பூஜை செய்து புனிதநீா் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. மேலும் மூலவா் மற்றும் பரிவாரத் தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்று, மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

நிகழ்வில் திருவாவடுதுறை ஆதீனம் 24-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாணதேசிகா் பராமாச்சாரியா் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டாா். மேலும் கோயில் செயல் அலுவலா் ச. முத்துராமன், திருப்பணி நிா்வாகிகள் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். வணிக வைசியா் சங்கம் மற்றும் வாணியா் சங்க அறக்கட்டளை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சாா்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவுக்கு, காவல்துறையினா் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

 திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் பூமிநாத சுவாமி கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் ராஜகோபுரக் கலசத்துக்கு புனிதநீா் ஊற்றிய சிவாச்சாரியாா்கள்.
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் பூமிநாத சுவாமி கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் ராஜகோபுரக் கலசத்துக்கு புனிதநீா் ஊற்றிய சிவாச்சாரியாா்கள்.
கும்பாஷேக விழாவில் பங்கேற்ற பக்தா்கள்.
கும்பாஷேக விழாவில் பங்கேற்ற பக்தா்கள்.

X
Dinamani
www.dinamani.com