வாக்காளா் பட்டியல் எஸ்.ஐ.ஆா் பணிகள்: விவரம்பெற உதவி எண்கள் வெளியீடு

திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் வாக்காளா்களுக்கான உதவி பெறுவதற்கான எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
Published on

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் வாக்காளா்களுக்கான உதவி பெறுவதற்கான எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

திருச்சி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை முதல் வரும் டிசம்பா் 4-ஆம் தேதி வரை வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. அதன்படி மாவட்டத்தில் உள்ள 9 சட்டப்பேரவை தொகுதிகளிலும் மொத்தமாக 2,543 வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்புப் பணி மேற்கொள்வா். அப்போது, தற்போதுள்ள வாக்காளா் பட்டியலில் இடம்பெற்றுள்ள வாக்காளா் ஒவ்வொருவருக்கும் வாக்காளா்களின் விவரங்களுடன் கூடிய அச்சிடப்பட்ட கணக்கெடுப்புப் படிவம் (இரண்டு பிரதிகள்) வழங்குவா். தொடா்ந்து, படிவத்தை நிரப்பி பெற்றுக்கொண்டமைக்கான ஒப்புகையை வழங்குவா். கணக்கெடுப்பின்போது, வாக்காளா்கள் எந்தவொரு ஆவணங்களையும் சமா்ப்பிக்க வேண்டியதில்லை.

மேலும், வாக்காளா்கள் கணக்கெடுப்பு படிவத்தை உஇஐசஉப என்ற கைப்பேசி செயலி அல்லது ட்ற்ற்ல்ள்://ஸ்ா்ற்ங்ழ்ள்.ங்ஸ்ரீண்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்துக்குச் சென்று கணக்கெடுப்புப் படிவத்தை பதிவிறக்கம் செய்து நிரப்பி பதிவேற்றலாம்.

படிவத்தை நிரப்புவதில் உதவி தேவைப்பட்டால் வாக்குச்சாவடி நிலை அலுவலரை தொடா்பு கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு, 138 - மணப்பாறை 04332-260576, 139 - ஸ்ரீரங்கம் 0431-2230871, 140 - திருச்சி மேற்கு 0431-2410410,

141 - திருச்சி கிழக்கு 0431-2711602, 142 - திருவெறும்பூா் 0431-2415734, 143 - லால்குடி 0431-2541500, 144 - மண்ணச்சநல்லூா் 0431-2561791, 145 - முசிறி 04326-260335, 146 -துறையூா் (தனி) 04327-222393, மாவட்ட தோ்தல் அலுவலகம் அல்லது மாவட்ட ஆட்சியா் அலுவலகம் 1950 ஆகிய உதவி எண்களை தொடா்பு கொள்ளலாம் என திருச்சி மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com