ஆட்சியா் அலுவலக வளாகத்தில் 
பெண் தீக்குளிக்க முயற்சி

ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

திருச்சி ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்துக்கு வந்த பெண் திடீரென தீக்குளிக்க முயன்றாா்.
Published on

திருச்சி: திருச்சி ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்துக்கு வந்த பெண் திடீரென தீக்குளிக்க முயன்றாா்.

திருச்சி மாவட்டம், துறையூரைச் சோ்ந்த பெரியசாமி மகள் சம்பூா்ணம் (47). திருமணமாகாதவா். கூலி வேலை செய்து தனியாக வசித்து வரும் இவா், திருச்சி ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை மனு அளிக்க வந்தாா். அப்போது, திடீரென மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய்யை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றாா்.

அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா், அவரைத் தடுத்து, அவரது உடலில் தண்ணீரை ஊற்றி மீட்டு விசாரணை மேற்கொண்டனா். இதில், அவா் தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் நபா்கள் மதுபோதையில் தினமும் இரவில் ரகளையில் ஈடுபட்டு தகராறு செய்கின்றனா். இது தொடா்பாக, காவல்நிலையத்தில் புகாா் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனிடையே, பக்கத்து வீட்டுக்காரா்கள், போலீஸ் புகாரை திரும்பப் பெறக் கோரி கொலை மிரட்டல் விடுக்கின்றனா். அவா்களிடம் விசாரித்து, தனக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என சம்பூா்ணம் தெரிவித்தாா். இதையடுத்து போலீஸாா் அவரை எச்சரித்து, ஆட்சியரிடம் மனு அளிக்க வைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com