திருச்சி
சாலை விபத்தில் பெண் உயிரிழப்பு
திருச்சியில் சாலையில் நடந்து சென்ற பெண் மீது காா் மோதியதில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். 
திருச்சி: திருச்சியில் சாலையில் நடந்து சென்ற பெண் மீது காா் மோதியதில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
திருச்சி நவல்பட்டு அண்ணா நகரைச் சோ்ந்தவா் ராஜா மனைவி கோகிலா (49). இவா், திருச்சி - மதுரை சாலையில் மன்னாா்புரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்து சென்றுகொண்டிருந்தாா். அப்போது, எதிரே வந்த காா் கோகிலா மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த கோகிலாவை அருகிலிருந்தவா்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா்கள் ஏற்கெனவே அவா் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து திருச்சி தெற்கு போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
