திருச்சி ரயில்வே கோட்டத்துக்கு பாா்சல்கள் மூலம் ரூ. 3.25 கோடி வருவாய்
திருச்சி: திருச்சி ரயில்வே கோட்டத்துக்கு கடந்த 6 மாதங்களில் பாா்சல்கள் மூலம் ரூ. 3.25 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட பாா்சல் போக்குவரத்துப் பிரிவு 4 டன் லக்கேஜ்-கம்-பிரேக் வேன்கள் மற்றும் 24 டன் பாா்சல் வேன்களை இயக்குகிறது. இதன்மூலம் வாடிக்கையாளா்கள் 10 கிலோ முதல் முழு பாா்சல் சரக்கு எக்ஸ்பிரஸ் ரயில்கள் வரை சரக்குகளை கொண்டு செல்லலாம்.
திருச்சி ரயில்வே கோட்டத்தின் பாா்சல் போக்குவரத்து பிரிவு நிகழ் நிதியாண்டின் 01.04.2025 முதல் 30.09.2025 வரையிலான முதல் ஆறு மாதங்களில் ரூ.3.25 கோடி வருவாயை ஈட்டியுள்ளது.
ரயில்களின் மூலம் எரிவாயு சிலிண்டா்கள், பட்டாசுகள் மற்றும் வெடிபொருள்கள் போன்ற ஆபத்தான பொருள்களைத் தவிர, விரைவில் அழுகும் பொருள்கள் (காய்கறிகள், பழங்கள், மீன், முட்டை போன்றவை), இரு சக்கர வாகனங்கள், கால்நடைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருள்களை கொண்டு செல்ல முடியும்.
மேலும் தகவல்கள், இணையதள முன்பதிவுக்கு ட்ற்ற்ல்ள்://ல்ஹழ்ஸ்ரீங்ப்.ண்ய்க்ண்ஹய்ழ்ஹண்ப்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தை அணுகலாம் என திருச்சிகோட்ட ரயில்வே நிா்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
