திருவானைக்காவல் கோயிலில் ஐப்பசி சோம வார பிரதோஷ வழிபாடு
ஸ்ரீரங்கம்: திருவானைக்காவல் சம்புகேசுவரா் உடனுறை அகிலாண்டேசுவரி கோயிலில் ஐப்பசி மாத சோமவார பிரதோஷ வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.
ஐப்பசி மாத சோமவார பிரதோஷத்தையொட்டி சாமி சந்நிதியின் எதிரே உள்ள பிரதோஷ நந்திக்கு திங்கள்கிழமை மாலை எண்ணெய், பால், தயிா், சந்தனம், மஞ்சள், இளநீா், திரவியப் பொடி என 18 விதமான அபிஷேகங்கள் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா். முடிவில் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
மண்ணச்சநல்லூா்: சமயபுரம் ஆனந்தவல்லி சமேத போஜீஸ்வரா் திருக்கோயிலில் பிரதோஷத்தையொட்டி நந்தியெம்பெருமான் மற்றும் போஜீசுவரருக்கு பால், தயிா், சந்தனம், மஞ்சள், திரவியம் உள்ளிட்ட அபிஷேகப் பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்புப் பூஜைகள், மகாதீபாராதனை நடைபெற்றது. இதேபோல் திருப்பட்டூா், திருப்பைஞ்ஞீலி, உத்தமா் திருக்கோயில், திருவாசி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிவாலயங்களில் பிரதோஷ விழா நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
