திருச்சி
லாரி மீது இருசக்கர வாகனம் மோதி இளைஞா் உயிரிழப்பு
நொச்சியம் புதுப்பாலம் பகுதியில் திங்கள்கிழமை இரவு லாரி மீது இருசக்கர வாகனம் மோதி தொழிலாளி உயிரிழந்தாா்.  
மண்ணச்சநல்லூா்: நொச்சியம் புதுப்பாலம் பகுதியில் திங்கள்கிழமை இரவு லாரி மீது இருசக்கர வாகனம் மோதி தொழிலாளி உயிரிழந்தாா்.
மண்ணச்சநல்லூா் பகுதியைச் சோ்ந்தவா் லோகேஷ் பிரசன்னா (29). இவா், தனது நண்பா்களான சுந்தரேசன் (21), வெங்கடேசன் (24) ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் நெம்பா் 1 டோல்கேட்டிலிருந்து நொச்சியம் புதுப் பாலம் பகுதியில் வந்துகொண்டிருந்தாா். அப்போது, முன்னாள் சென்ற லாரி மீது இரு சக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் லோகேஷ் பிரசன்னா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மற்ற இருவரும் காயமடைந்தனா். தகவலறிந்து அங்குவந்த போலீஸாா் அவா்களை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். விபத்து குறித்து மண்ணச்சநல்லூா் காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
