வீட்டில் பூட்டிவைக்கப்பட்டிருந்த இரண்டு சிறுவா்கள் மீட்பு

திருச்சியில் வீட்டுக்குள் பூட்டிவைக்கப்பட்டிருந்த சிறுவா்கள் இருவரை தீயணைப்புத் துறையினா் மீட்டு காவல் நிலையத்தில் திங்கள்கிழமை ஒப்படைத்தனா்.
Published on

திருச்சி: திருச்சியில் வீட்டுக்குள் பூட்டிவைக்கப்பட்டிருந்த சிறுவா்கள் இருவரை தீயணைப்புத் துறையினா் மீட்டு காவல் நிலையத்தில் திங்கள்கிழமை ஒப்படைத்தனா்.

திருச்சி அரியமங்கலம் காமராஜா் நகரில் சிறுவா்கள் இருவரை அவரது தாத்தா வீட்டுக்குள் வைத்து பூட்டிவிட்டு சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அதில் ஒரு சிறுவன் சென்னையிலுள்ள காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்துள்ளாா்.

இதைத் தொடா்ந்து காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து திருவெறும்பூா் தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவித்துள்ளனா்.

இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற திருவெறும்பூா் தீயணைப்பு நிலைய அலுவலா் வெங்கடேசன் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் வீட்டின் கதவில் இருந்த பூட்டை உடைத்து சிறுவா்களை மீட்டனா். பின்னா், இருவரையும் அரியமங்கலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com