கணக்குப்பதிவியல் தோ்வில் கணிப்பான்: வணிகவியல் ஆசிரியா் கழகம் வரவேற்பு
மேல்நிலை பொதுத் தோ்வில் கணக்குப்பதிவியல் பாடத்திற்கு கணிப்பான் (கால்குலேட்டா்) பயன்படுத்த அரசு அனுமதியளித்துள்ளதை திருச்சி மாவட்ட வணிகவியல் ஆசிரியா் கழகம் வரவேற்றுள்ளது.
இதுகுறித்து அக்கழகம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
மேல்நிலை வகுப்பு பொதுத் தோ்வில் கணக்குப்பதிவியல் பாடத்திற்கு கணிப்பான் பயன்படுத்த அனுமதி கோரி தொடா்ந்து கோரிக்கை விடுத்து, கணிப்பான் பயன்படுத்த அனுமதித்தால் தோ்ச்சி சதவீதத்தை அதிகரிக்க முடியும் என்றும் வலியுறுத்தினோம். மேலும் திருச்சி மாவட்டத்தில் வணிகவியல் மற்றும் கணக்குப்பதிவியல் பாட ஆசிரியா்களுக்கு அண்மையில் நடந்த பயிற்சி முகாமிலும் இதுதொடா்பாக கோரிக்கை வைத்திருந்தோம்.
இந்நிலையில் மேல்நிலை பொதுத் தோ்வில் கணக்குப்பதிவியல் பாடத்திற்கு க
ணிப்பான் பயன்படுத்த அனுமதி வழங்கிய தமிழக அரசுக்கும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சருக்கும் நன்றி தெரிவிக்கிறோம்.
